தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்

கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 2016 வாங்குவோர் மற்றும் விற்பவர்களுக்கிடையிலான குடியிருப்பு மற்றும் வணிக பரிவர்த்தனைகளை முறைப்படுத்தி கட்டட மனைவிற்பனைத் துறையினை முறைப்படுத்தி மேம்படுத்த விழைகின்றது. மாநில அளவில் கட்டட மனைவிற்பனை ஒழுங்குமுறை குழுமம் கட்டடமனை விற்பனைத் துறையினை கண்காணிக்கவும், கட்டடமனை விற்பனை சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கவும் இச்சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. இச்சட்டத்தின் முக்கிய குறிக்கோளானது வீடு மற்றும் மனை வாங்குவோர்களின் நலனைப் பாதுகாத்து இத்துறையில் முதலீட்டை அதிகரிக்க உதவிடுவதாகும்.

கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் - கண்ணோட்டம்

மைய அரசு கட்டடம் மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 2016-னை அறிவிக்கை செய்தது. இச்சட்டத்தின் கீழ் விதிகளை ஏற்பாடு செய்யவும் கட்டட மனை விற்பனைத்துறையினை கண்காணித்து வழக்குகளை விசாரிக்கவும் கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்க இச்சட்டம் வழிவகை செய்கின்றது. கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 2016-ன் விதிகளை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை நிலை எண்.112 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள் 22.06.2017-ல் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) விதி 2017க்கு ஒப்புதலளித்துள்ளது .

கட்டட மனை விற்பனைத் திட்டங்கள் மற்றும் முகவர்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யாமல் இத்திட்டங்களிலிருந்து குடியிருப்பு / மனைகளை விற்பனை செய்ய இயலாது. இவ்விதிகள் அனைத்துக் கட்டங்களிலும் மனையின் பரப்பளவு 500ச.மீ.க்கு மேல் மற்றும் கட்டப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 8-க்கு மேல் உள்ள அனைத்து நடைபெற்று வரும் மற்றும் எதிர்காலத் திட்டங்கட்கும் பொருந்தும். உத்தேசித்துள்ள திட்டங்களின் திட்டப் பதிவு, குடியிருப்பு வகைகள் அல்லது பதிவு செய்த மனைகள், பெறப்பட்ட அனுமதிகளின் பட்டியல் போன்ற விவரங்களை குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாங்குவோர் மற்றும் திட்ட மேம்பாட்டாளர்கள் தத்தமது கடமைகளிலிருந்து தவறினால் சமமான வட்டி செலுத்த வேண்டும். அது போலவே சொத்து வியாபாரிகள், தரகர்கள், இடைத்தரகர்கள் போன்ற எந்த பெயரில் இயங்கும் அனைவரும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யவேண்டும்.

தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யத் தவறுவது அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றம் ஆகும்.

குழுமத்தின் அலுவலகம் க. எண். 1A, முதல் தளம், காந்தி இர்வின் பாலம் சாலை, எழும்பூர், சென்னை - 600008ல் இயங்குகிறது. அலுவலக நேரம் அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை.

img-responsive
img-responsive

சமீபத்திய செய்திகள்